பஞ்சதந்திரக் கதைகள் – கஞ்சன் மற்றும் அவனது தங்கம்

ஒரு காலத்தில், ஒரு கஞ்சன் இருந்தான். அவன் தனது தங்கத்தை செலவு செய்யமால் பத்திரமாக வைத்திருந்தான். அவன் ஒரு குழி தோண்டி, தோட்டத்தில் உள்ள மரத்தின் அருகே தங்கத்தை புதைத்து வந்தான்.

தினமும் மரத்தின் அருகே சென்று அதை தோண்டி எடுத்து தங்கத்தை மகிழ்ச்சியுடன் பார்த்து வந்தான். அவன் எப்பொழுதும் தனக்குள் நினைத்துக் கொண்டான், “நான் மிகவும் பணக்காரன், இவ்வளவு தங்கம் எனக்குச் சொந்தம்” இது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஒரு நாள், ஒரு வழிப்போக்கர் அவன் தோண்டுவதைப் பார்த்தார், கஞ்சன் மறைத்து வைத்திருந்த தங்கத்தைப் பார்த்தார். வழிப்போக்கர் மரத்தடியில் தங்கம் இருப்பதை கண்டு இருட்டும் வரை காத்திருந்து கொள்ளையடிக்க திட்டம் போட்டான். கொள்ளையன் தங்கத்தை தோண்டி எடுக்க இரவு வரை காத்திருந்தான். மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் அனைத்தையும் திருடி கொண்டான்.

மறுநாள் கஞ்சன் தன் தங்கத்தைப் பார்க்க வந்தான். கஞ்சன்- “என் தங்கம் எங்கே? என் தங்கம் எங்கே?” கஞ்சன் தன் தங்கத்தை மறைத்து வைத்திருந்த இடத்தில் ஒரு பெரிய குழி தூண்டினான். ஆனால் அந்த ஓட்டையில் தங்கம் எதுவும் சிக்கவில்லை. என் தங்கத்தை திருடியது யார்?” என்று கஞ்சன் அழ ஆரம்பித்தான். கஞ்சனின் அழுகையை கேட்டு அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஓடி வந்தனர்.

பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம், “என்ன நடந்தது? ஏன் வருத்தப்படுகிறீர்கள்?”. கஞ்சன் அந்த ஓட்டையைக் காட்டி, மரத்தடியில் தான் மறைத்து வைத்திருந்த தங்கத்தைப் பற்றி அனைத்தையும் சொன்னான். அப்போது மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம், “நீங்கள் எப்போதாவது உங்கள் தங்கத்தை பயன்படுத்தியுள்ளீர்களா?” கஞ்சன் அவனிடம், “இல்லை, நான் அதை தோண்டி மட்டுமே எடுப்பேன், அதைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்று பதிலளித்தார்.

அப்போது பக்கத்து வீட்டுக்காரன்- “நீ எதையும் பயன்படுத்தவே இல்லையே! தங்கம் நிலத்தில் இருந்ததால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. அந்தத் துவாரத்தைப் பார்த்து, அதனுள் தங்கம் இன்னும் இருக்கிறது என்று நினைத்துக்கொள். அப்போது முன்பு போலவே மகிழ்ச்சியாக இருப்பாய்.” என்று கூறி அக்கம்பக்கத்தினர் சிரிக்க ஆரம்பித்தனர்.

கதையின் கருத்து:  உங்களிடம் உள்ள நல்ல குணத்தையோ அல்லது திறமையையோ நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் பயன் ஒன்றுமில்லை. ஆகையால் உங்களிடம் உள்ளதை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேறுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்