திருமண நாள் வாழ்த்து

அனைவரின் வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான நிகழ்வே திருமணம். இல்லற வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது. அத்தகைய சிறப்பான நிகழ்வான திருமணம் நல்லபடியாக முற்று பெற பெரியோர் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆசீர்வாதங்கள் அவசியமாகிறது. அதனாலே ஊர் கூடி சுற்றம் சூழ நின்று வரவேற்று அனைவரும் ஒன்று கூடி விவாகத்தை நிறைவு செய்கின்றனர். கணவன் மனைவி எனும் உன்னதமான உறவின் தொடக்க நாளான இந்த நாளை “ திருமண நாள் வாழ்த்து ” ( Wedding Anniversary Wishes ) கவிதை மூலம் வாழ்த்துங்கள்.


திருமண நாள் வாழ்த்து ( WEDDING ANNIVERSARY WISHES )


திருமண நாள் வாழ்த்து

திருமண நாள் வாழ்த்து ( Wedding Anniversary Wishes ): இரண்டு உயிர்கள் ஓர் உயிராக இணைந்து மணமுடிக்கும் திருநாளே திருமண நாள்! இத்தகைய மகிழ்ச்சிகரமான திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். வயதான தம்பதிகளும் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திருமண நாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துவார்கள்.

உங்களின் வாழ்க்கை துணையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்ல உங்கள் திருமண நாள் ஒரு சிறப்பான நாளாகும். மகிழ்ச்சியான திருமண நாளில் என்ன மாதிரியான வாழ்த்துகள் சொல்ல வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இன்று திருமண நாள் காணும் தம்பதியருக்கு வாழ்த்துக்களை ( Wedding Anniversary Wishes ) பகிர்வதற்காக உங்களுக்காக இங்கே திருமண நாள் வாழ்த்து படங்கள், கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை அவர்களோடு பகிர்ந்து உளமார அவர்களை வாழ்த்தி மகிழுங்கள்!

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்