தமிழ் பதிவுகள்

ஓதுவது ஒழியேல்

எங்களது Whatsapp குழுவில் இணைய

mother therasa - thathuva kavithai image

தமிழ் பதிவுகள்

தமிழ் மொழியை பேச மறந்துவரும் தமிழர்களே. எத்தனை பேருக்கு தமிழின் பெருமைகள் முழுமையாக தெரியும்? “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்” தான் தமிழர்கள்.
ஆனால் இன்று தமிழில் பேச வெட்கப்படுவதும் அவர்கள்தான். இதற்கு காரணம் நம் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாததுதான்.முதலில் நாம் நம் வரலாற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும். பலவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவன்தான் தமிழன். தமிழன் தன் அதீத பகுத்தறிவின் ஊடாக தான் வாழ்ந்த நிலங்களை கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை, என ஐந்து திணைகளாகவும், தமிழ் இலக்கியங்களை அகம் , புறம் எனவும் தமிழரின் கலைகளை இயல், இசை, நாடகம் என்றும் எழுத்துக்களை கூட உயிர், மெய், உயிர் மெய் எனவும் வகுத்தான்.

மொழி அறிவியலை தமிழன் இத்தகைய அளவு கையாண்டதை போல யாரும் கையாலவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. தமிழன் எப்படி முதலில் தோன்றினானோ அது போலவே தமிழ் மொழியும்தான் முதலில் தோன்றி இருக்க வேண்டும். உலகின் ஆதிமொழி தமிழ்தான் என்பது பலரின் கருத்து. ஆனால் ஒவ்வொரு தமிழனும் தொடர்பு இல்லாதவன் போல சிதைந்து கிடக்கின்றான்.

Follow us

தமிழ் பதிவுகள்