போட்டியில் கலந்துக் கொள்ள

தமிழ்ப் பதிவுகள் ( About Us )

எங்களின் குறிக்கோள்

சுமார்  6000 அதிகமான உறுப்பினர்களை கொண்டு தளத்தில் முதலிடம் பிடிப்பதே எங்களின் முதன்மை குறிக்கோள் ஆகும். 1000 அதிகமான புத்தகங்களின் விவரம் மற்றும் மற்ற கல்வி, பொது நல நூல்களை தளத்தின் மூலம் வழங்குவதும் எண்களின் தலையாய விருப்பம் ஆகும்.

1000+

கவிதைகள்

500+

கட்டுரைகள்

100+

இலக்கியங்கள்

100+

புலவர்கள்

தமிழ்ப் பதிவுகள்

தமிழ் மொழியை பேச மறந்துவரும் தமிழர்களே. எத்தனை பேருக்கு தமிழின் பெருமைகள் முழுமையாக தெரியும்? “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்” தான் தமிழர்கள்.
ஆனால் இன்று தமிழில் பேச வெட்கப்படுவதும் அவர்கள்தான். இதற்கு காரணம் நம் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாததுதான்.முதலில் நாம் நம் வரலாற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும். பலவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவன்தான் தமிழன். தமிழன் தன் அதீத பகுத்தறிவின் ஊடாக தான் வாழ்ந்த நிலங்களை கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை, என ஐந்து திணைகளாகவும், தமிழ் இலக்கியங்களை அகம் , புறம் எனவும் தமிழரின் கலைகளை இயல், இசை, நாடகம் என்றும் எழுத்துக்களை கூட உயிர், மெய், உயிர் மெய் எனவும் வகுத்தான்.

மொழி அறிவியலை தமிழன் இத்தகைய அளவு கையாண்டதை போல யாரும் கையாலவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. தமிழன் எப்படி முதலில் தோன்றினானோ அது போலவே தமிழ் மொழியும்தான் முதலில் தோன்றி இருக்க வேண்டும். உலகின் ஆதிமொழி தமிழ்தான் என்பது பலரின் கருத்து. ஆனால் ஒவ்வொரு தமிழனும் தொடர்பு இல்லாதவன் போல சிதைந்து கிடக்கின்றான்.

ஏன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளவில்லை. இனியாவது தலை நிமிர்ந்து தமிழனென்று சொல். யாருக்கும் இல்லாத தனிப் பெருமை தமிழனுக்கு உண்டு. இதை காக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தனி மனிதனுக்கு உண்டு.

எங்கள் இணையத்தளம் தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதாக கண்டறிய, புரிந்துக்கொள்ள உதவும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் எங்களுடன் சேர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியங்கள் வளர வழிவகுக்க உதவுங்கள்.

முகவரி

எங்களைத் தொடர்புக் கொள்ள