அப்பா கவிதைகள் | APPA Kavithai in tamil

தமிழ் பதிவுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தாயைப் போலவே, தந்தை இல்லாமல் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கை முழுமையடையாததாகும். அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியிலும் ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறார் . தந்தை முதலில் தங்கள் குடும்பங்களை முன்னுரிமைகளை வைத்து பின்னர் தங்களுடைய தேவைகளை முன்னுரிமை வைப்பதினால் அவர் சிறந்து விளங்குகிறார்.
தமிழ்ப்பதிவுகள் அப்பா கவிதைகள் ஒரு பரந்த தொகுப்பு உங்களுக்கு வழங்குகிறது , இதன் மூலம் , நீங்கள் உங்கள் தந்தை நோக்கி உங்கள் காதல் வெளிப்படுத்தவும் முடியும். இந்த கவிதைகள் மூலம் உங்கள் தந்தை சிறப்பாக உணருவார்கள். சிறந்த சந்தர்பங்களான தந்தையின் நாள், திருமண நாள் . அத்தகைய சைகைகள் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாததால் அவர்களுக்கு கவிதைகளின் மூலம் அவர்களுக்கு மறக்கமுடியாத ஒரு நாளாக மாற்றுங்கள் .

ஒரு அன்னைக்கு பத்து மாதம் பிரசவ காலம்
ஒரு தந்தையின் பிரசவ காலம் ஆயுள் காலம்
அன்னை என்பவள் மரம் போல
தந்தை என்பவர் வேர் போல
மரத்தை அனைவரும் போற்றுகின்றோம்
வேர் ஒன்று இருப்பதை மறந்து விட்டோம்
வேர் என்ற ஒன்று இல்லை என்றால்
மரம் என்ற ஒன்று எங்கே வாழும்
வேர் செய்யும் தியாகம் தெரிவதில்லை
வேர் படும் வலிகள் அறிவதில்லை
எத்தனை தியாகம் செய்தாலும்
எத்தனை வலிதான் பட்டாலும்
வெளியில் தெரியாது வேர் தியாகம்
அன்னை பிரசவம் போன்ற உயிர்த் தியாகம்
வாழ்வில் நான் உயர அனுதினமும் உழைத்தாய்
அம்மா இருந்தாலும் நீயும் தான் என் தாய்
பட்டினி கண்டதில்லை நீ இருந்த வரையில்
நீதானே என்றென்றும் தியாகத்தின் புதையல்

உன் பங்கு உணவையும் எனக்கு ஊட்டி மகிழ்ந்தாய்
பாசத்தில் கர்ணனாக என்றென்றும் திகழ்ந்தாய்
நீ இருக்கும் வரை மதித்ததில்லை உன்னை
அதனால் தான் தவிக்கவிட்டு பிரிந்தாயோ என்னை
நீ சென்ற பிறகே உன் தியாகம் அறிந்தேன்
உன்னை பிரிந்த வருத்தத்தில் அனுதினமும் அழுதேன்
போதுமப்பா வந்துவிடு தவிக்கிறேன் உன் பிள்ளை
மரணம் என்ற ஒன்று உனக்கு என்றும் இல்லை
என் மனதில் நிறைந்தவனே வந்துவிடு விரைந்து
உன் நினைவை பிரதிபலிக்கும் இக்கவி தானே விருந்து
தந்தையர் தின வாழ்த்துக்கள் நவில்கின்றேன் இன்று
தினந்தோறும் பார்க்கிறேன் நீ எங்கே எங்கே என்று.


எங்கள் அப்பா கவிதைகளால் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாத தருணங்களை செய்யலாம்.

Appa Kavithai in Tamil

0

சிப்பிக்குள் இருக்கும் முத்து

சிப்பிக்குள் இருக்கும் முத்து போல தான் அப்பாவின் அன்பு வெளியில் தெரியாது ஆனால் விலை உயர்ந்தது
0

கவலைகள் ஒன்றும்பெரிதல்ல

நம்மை வளர்க்க தந்தை படும் துன்பத்தையும் துயரத்தையும் விடநம் கவலைகள் ஒன்றும்பெரிதல்ல.
3

அம்மா செல்லங்கள் தான்

பெண்கள்அப்பா செல்லங்களாக இருந்தாலும் ஆண்கள் எப்போதும் அம்மா செல்லங்கள் தான்..!
3

ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்

பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.. பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்...
2

தாங்கி பிடிக்க தாயும்

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருக்கும் வரை எந்த உறவும் வீழ்ந்து போவதில்லை..
2

சிறந்த அப்பாவாக

சிறந்த அப்பாவாக மட்டுமல்ல வாழ்வில் நல்ல நண்பனாக என் அப்பா இருப்பது எனக்கு கடவுள் கொடுத்த…
3

அம்மா அப்பா

நம்மை வாழ வைப்பதற்காக வாழும் இரு உயிர்கள் அம்மா அப்பா
0

தன்னம்பிக்கையையும் கொடுப்பவர்

வாழ்வில் உறுதுணையாக மட்டுமல்ல வாழ தேவையான தன்னம்பிக்கையையும் கொடுப்பவர் அப்பா
4

அவரின் சிரித்த முகம்

அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு பாடம் ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் அவரின் சிரித்த…
3

நாளும் வாழாமல் உழைப்பவர்

நம்மை வாழ்வின் உயரம் ஏற்ற, துயரங்கள் பல ஏற்பவர்! நாளும் வாழாமல் உழைப்பவர்!
1

கருணையும் அன்பும்

நூறு தாய்மைக்கு சமம்.. ஒரு தகப்பனின் கண்டிப்பும், கருணையும் அன்பும்!
0

மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள்

அப்பாவிடம், தன் கடைசி காலம் வரை மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள் பெண்குழந்தைகள்...!
0

வேதனைகள் நெருங்கக் கூடாது

கனவில் கூட மகள்களுக்கு வேதனைகள் நெருங்கக் கூடாது என எண்ணுபவர் அப்பா...!!!
1

நாம் நேசிக்கிறவங்களுக்கு

அதிக அன்பு கூட நாம் நேசிக்கிறவங்களுக்கு சில நேரம் தொல்லையாக மாறி விடுகிறது.
4

சொந்த காலில் நிற்கும் போது

சொந்த காலில் நிற்கும் போது தான் தெரிகிறது.. இத்தனை நாள் சுமந்தவருக்கு எப்படி வலித்திருக்கும் என்று.!
1

இரண்டு தாய்

பெண்' பிள்ளைகளை பெற்ற எல்லா அப்பாக்களும் அதிஷ்டசாலிகளே ஏனென்றால்... அவர்களுக்கு மட்டுமே இரண்டு தாய்...!
1

தந்தையின் கடல் அளவு

தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீ…
0

கடவுள் அளித்த வரம்

கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அவர்தான் என் அப்பா ..!
1

பெண்களுக்கு பாதுகாப்பு

பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் ஆண் தன் தகப்பன் தான்
0

நெஞ்சில் சுமப்பவர் தான் அப்பா

அம்மா என்னை வயிற்றில் சுமந்தாலும் ஆயுள் வரை என்னை நெஞ்சில் சுமப்பவர் தான் அப்பா..!
0

பெற்றுத் தருவான் தந்தை

உன்னை எதிர்பார்த்து பெற்றடுப்பாள் அன்னை... உன் எதிர்காலத்தை பெற்றுத் தருவான் தந்தை
0

என் அன்பு அப்பா

சில நேரங்களில் பகைவன் போல தெரிந்தாலும் உனது பாசத்தை மிஞ்சிட யாரும் இல்லை இவ்வுலகில் என்…
1

தகப்பன் மொழி மகளுக்கு

மழலை மொழி தாய்க்கு புரியும் தகப்பன் மொழி மகளுக்கு மட்டும் புரியும்...
0

தன் பிள்ளைகள் கற்கவேண்டும்

தான் கற்றதை விட அதிகம் தன் பிள்ளைகள் கற்கவேண்டும் என்று நினைப்பது அப்பா மட்டுமே..!
0

உன்னோடு இருப்பவன் அல்ல

நல்ல நண்பன் என்பவன் எப்பொழுதும் உன்னோடு இருப்பவன் அல்ல... ' எப்பொழுதும் உனக்காக இருப்பவன்.
2

என் கனவுகளையும் சுமந்து கொண்டு

என்னை மட்டும் அல்ல, என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடக்கிறார் என் அப்பா !
2

அப்பாவுக்கு நிகரான

எதனையோ சரிவுகளுக்குப் பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே…
1

தந்தையின் கை மட்டுமே

உலகிலேயே அதிக பாதுகாப்பு மிகுந்த இடம் “தந்தையின் கை மட்டுமே"
3

தந்தைக்கு பின் தந்தை மட்டுமே

தாய்க்கு பின் தாரம் ஆனால் ஆனால் தந்தைக்கு பின் தந்தை மட்டுமே.. யாராலும் அந்த இடத்தை…
2

ஒரே உறவு “அப்பா" மட்டும் தான்

நம்மல எந்த சுழ்நிலையிலும் யார்கிட்டையும் எதற்க்காகவும் விட்டு குடுக்காத ஒரே உறவு “அப்பா" மட்டும் தான்
1 2 3 6

1 thought on “அப்பா கவிதைகள் | APPA Kavithai in tamil”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்