தமிழ் பதிவுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
தாயைப் போலவே, தந்தை இல்லாமல் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கை முழுமையடையாததாகும். அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியிலும் ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறார் . தந்தை முதலில் தங்கள் குடும்பங்களை முன்னுரிமைகளை வைத்து பின்னர் தங்களுடைய தேவைகளை முன்னுரிமை வைப்பதினால் அவர் சிறந்து விளங்குகிறார்.
தமிழ்ப்பதிவுகள் அப்பா கவிதைகள் ஒரு பரந்த தொகுப்பு உங்களுக்கு வழங்குகிறது , இதன் மூலம் , நீங்கள் உங்கள் தந்தை நோக்கி உங்கள் காதல் வெளிப்படுத்தவும் முடியும். இந்த கவிதைகள் மூலம் உங்கள் தந்தை சிறப்பாக உணருவார்கள். சிறந்த சந்தர்பங்களான தந்தையின் நாள், திருமண நாள் . அத்தகைய சைகைகள் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாததால் அவர்களுக்கு கவிதைகளின் மூலம் அவர்களுக்கு மறக்கமுடியாத ஒரு நாளாக மாற்றுங்கள் .
ஒரு அன்னைக்கு பத்து மாதம் பிரசவ காலம்
ஒரு தந்தையின் பிரசவ காலம் ஆயுள் காலம்
அன்னை என்பவள் மரம் போல
தந்தை என்பவர் வேர் போல
மரத்தை அனைவரும் போற்றுகின்றோம்
வேர் ஒன்று இருப்பதை மறந்து விட்டோம்
வேர் என்ற ஒன்று இல்லை என்றால்
மரம் என்ற ஒன்று எங்கே வாழும்
வேர் செய்யும் தியாகம் தெரிவதில்லை
வேர் படும் வலிகள் அறிவதில்லை
எத்தனை தியாகம் செய்தாலும்
எத்தனை வலிதான் பட்டாலும்
வெளியில் தெரியாது வேர் தியாகம்
அன்னை பிரசவம் போன்ற உயிர்த் தியாகம்
வாழ்வில் நான் உயர அனுதினமும் உழைத்தாய்
அம்மா இருந்தாலும் நீயும் தான் என் தாய்
பட்டினி கண்டதில்லை நீ இருந்த வரையில்
நீதானே என்றென்றும் தியாகத்தின் புதையல்
உன் பங்கு உணவையும் எனக்கு ஊட்டி மகிழ்ந்தாய்
பாசத்தில் கர்ணனாக என்றென்றும் திகழ்ந்தாய்
நீ இருக்கும் வரை மதித்ததில்லை உன்னை
அதனால் தான் தவிக்கவிட்டு பிரிந்தாயோ என்னை
நீ சென்ற பிறகே உன் தியாகம் அறிந்தேன்
உன்னை பிரிந்த வருத்தத்தில் அனுதினமும் அழுதேன்
போதுமப்பா வந்துவிடு தவிக்கிறேன் உன் பிள்ளை
மரணம் என்ற ஒன்று உனக்கு என்றும் இல்லை
என் மனதில் நிறைந்தவனே வந்துவிடு விரைந்து
உன் நினைவை பிரதிபலிக்கும் இக்கவி தானே விருந்து
தந்தையர் தின வாழ்த்துக்கள் நவில்கின்றேன் இன்று
தினந்தோறும் பார்க்கிறேன் நீ எங்கே எங்கே என்று.
எங்கள் அப்பா கவிதைகளால் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாத தருணங்களை செய்யலாம்.
அருமை….