அப்பா கவிதைகள் | APPA Kavithai in tamil

தமிழ் பதிவுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தாயைப் போலவே, தந்தை இல்லாமல் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கை முழுமையடையாததாகும். அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியிலும் ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறார் . தந்தை முதலில் தங்கள் குடும்பங்களை முன்னுரிமைகளை வைத்து பின்னர் தங்களுடைய தேவைகளை முன்னுரிமை வைப்பதினால் அவர் சிறந்து விளங்குகிறார்.
தமிழ்ப்பதிவுகள் அப்பா கவிதைகள் ஒரு பரந்த தொகுப்பு உங்களுக்கு வழங்குகிறது , இதன் மூலம் , நீங்கள் உங்கள் தந்தை நோக்கி உங்கள் காதல் வெளிப்படுத்தவும் முடியும். இந்த கவிதைகள் மூலம் உங்கள் தந்தை சிறப்பாக உணருவார்கள். சிறந்த சந்தர்பங்களான தந்தையின் நாள், திருமண நாள் . அத்தகைய சைகைகள் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாததால் அவர்களுக்கு கவிதைகளின் மூலம் அவர்களுக்கு மறக்கமுடியாத ஒரு நாளாக மாற்றுங்கள் .

ஒரு அன்னைக்கு பத்து மாதம் பிரசவ காலம்
ஒரு தந்தையின் பிரசவ காலம் ஆயுள் காலம்
அன்னை என்பவள் மரம் போல
தந்தை என்பவர் வேர் போல
மரத்தை அனைவரும் போற்றுகின்றோம்
வேர் ஒன்று இருப்பதை மறந்து விட்டோம்
வேர் என்ற ஒன்று இல்லை என்றால்
மரம் என்ற ஒன்று எங்கே வாழும்
வேர் செய்யும் தியாகம் தெரிவதில்லை
வேர் படும் வலிகள் அறிவதில்லை
எத்தனை தியாகம் செய்தாலும்
எத்தனை வலிதான் பட்டாலும்
வெளியில் தெரியாது வேர் தியாகம்
அன்னை பிரசவம் போன்ற உயிர்த் தியாகம்
வாழ்வில் நான் உயர அனுதினமும் உழைத்தாய்
அம்மா இருந்தாலும் நீயும் தான் என் தாய்
பட்டினி கண்டதில்லை நீ இருந்த வரையில்
நீதானே என்றென்றும் தியாகத்தின் புதையல்

உன் பங்கு உணவையும் எனக்கு ஊட்டி மகிழ்ந்தாய்
பாசத்தில் கர்ணனாக என்றென்றும் திகழ்ந்தாய்
நீ இருக்கும் வரை மதித்ததில்லை உன்னை
அதனால் தான் தவிக்கவிட்டு பிரிந்தாயோ என்னை
நீ சென்ற பிறகே உன் தியாகம் அறிந்தேன்
உன்னை பிரிந்த வருத்தத்தில் அனுதினமும் அழுதேன்
போதுமப்பா வந்துவிடு தவிக்கிறேன் உன் பிள்ளை
மரணம் என்ற ஒன்று உனக்கு என்றும் இல்லை
என் மனதில் நிறைந்தவனே வந்துவிடு விரைந்து
உன் நினைவை பிரதிபலிக்கும் இக்கவி தானே விருந்து
தந்தையர் தின வாழ்த்துக்கள் நவில்கின்றேன் இன்று
தினந்தோறும் பார்க்கிறேன் நீ எங்கே எங்கே என்று.


எங்கள் அப்பா கவிதைகளால் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாத தருணங்களை செய்யலாம்.

Appa Kavithai in Tamil

0

தூக்கும் ஒரே உறவு அப்பா

தான் கீழே இருந்தாலும் நம்மை மேலே தூக்கும் ஒரே உறவு அப்பா ...!
1

இளவரசியாகவே இருக்கிறாள்

எந்த பெண்ணும் அவள் கணவணுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு தமிழ்…
0

தந்தை மட்டுமே

கண்களில் கோபத்தையும் இதயத்தில் பாசத்தையும் வைக்கும் ஓரே உறவு... தந்தை மட்டுமே...
0

ஒரே உயர் அப்பா

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஒரே உயர்…
0

மார்பினிலே முகத்தை புதைத்திட்டு

அம்மாவை கோபித்து உந்தன் மார்பினிலே முகத்தை புதைத்திட்டு ஓரக் கண்ணாலே உன்னைப் பார்த்த சிறு வயது…
0

பரந்த உலகத்தின் கதவுகளை

இந்தப் பரந்த உலகத்தின் கதவுகளை எனக்குத் திறந்து காட்டியவர் - அப்பா!
1

அப்பா என்னுடையது

நான்கு வயதில் சண்டை போட்டோம் அம்மா என்னுடையது அப்பா என்னுடையது நாற்பது வயதில் சண்டை போடுகிறோம்…
0

தந்தையின் அழுகையை தாங்கிக்கொள்ளும் பிள்ளைகள்

தாயின் அழுகைக்குஆறுதல் சொல்லும் பிள்ளைகள்அதிகம் வந்துவிட்டனர், ஆனால்தந்தையின் அழுகையைதாங்கிக்கொள்ளும் பிள்ளைகள்இன்னும் பிறக்கவில்லைஎன்பதே உண்மை
0

வாசலில் குப்பைக்காரர் நிற்கிறார்

கற்றுக்கொடுங்கள்மகன் தந்தையிடம் “வாசலில்குப்பைக்காரர் நிற்கிறார்” என்றான்தந்தை சொன்னார் “மகனே நாம்தான்குப்பைக்காரர்கள் அவர் சுத்தக்காரர்…நமக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.அவருக்கு…
0

இந்த பரந்த உலகத்தின்

இந்தபரந்தஉலகத்தின்கதவுகளைஎனக்குத்திறந்துகாட்டியவர் - அப்பா!
0

அப்பாவின் அன்பில்

அப்பாவின் அன்பில்ஓர் அழகியல் இருக்கின்றது;அது.. மகள்களுக்கு மட்டுமேஉரித்தாகின்றது!
0

தாய் நம்மிடம் எதிர்பார்ப்பது

தாய் நம்மிடம்எதிர்பார்ப்பதுபணத்தையல்லதன்னுடையவளர்ப்பை பிறர் குறைசொல்லாதவாறுஉள்ள நல்ல குணத்தை
0

ஒரு பொறுப்பு மிக்க தந்தை

நூறு ஆசான்களுக்குஒப்பானவர்;ஒரு பொறுப்பு மிக்க தந்தை.
0

அப்பாக்களுக்குள்ளும் ஓர் ஒற்றுமை உண்டு

எல்லா அப்பாக்களுக்குள்ளும்ஓர் ஒற்றுமை உண்டுநான் பார்த்த வேலையைஎன் மகன் பார்க்கக்கூடாதுஎன்று..!நான் பார்க்காதஉலகத்தைதன் பிள்ளைகள்பார்க்க வேண்டும் என்று…..
0

அப்பான்றது வார்த்தை அல்ல

வாழ்க்கையைவாழ்ந்து பார்க்கும்போதுதான்தெரியும்'அப்பான்றது"வார்த்தை அல்லஅதுவாழ்க்கையின்பாடம் என்று…!!
0

ஒரு அப்பாவை

ஒரு அப்பா ஐந்து பிள்ளைகளை காப்பாற்றுவார்... ஐந்து பிள்ளைகளால் ஒரு அப்பாவை காப்பாற்ற முடிவதில்லை ...!!
0

குழந்தையின் வழிகாட்டியாய்

அழகிய உறவாய் அன்பான துணையாய் உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும்…
0

தன் உணர்வுகளை

ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை…
0

பூமியின் மீது பாதம் பதியும்

எனது தந்தைக்காக.... பூமியின் மீது பாதம் பதியும் முன் தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்...…
0

என் விரள்கள் சேர்த்து

நான் நடை பழகிய பொழுது என் விரள்கள் சேர்த்து பயணம். இன்று நீ தடுமறும் பொழுது…
0

மகன்கள்

தன் தந்தையின் அதீத கோபங்களை கூட ஏற்றுக்கொள்ளும் மகன்கள் .... அவர் கண்களின் கண்ணீரை ஒருபோதும்…
0

என் விரள்கள் சேர்த்து பயணம்

நான் நடை பழகிய பொழுது என் விரள்கள் சேர்த்து பயணம். இன்று நீ தடுமறும் பொழுது…
0

தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்

எனது தந்தைக்காக.... பூமியின் மீது பாதம் பதியும் முன் தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்...…
0

அன்பான துணையாய்

அழகிய உறவாய் அன்பான துணையாய் உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும்…
0

நியூட்டனின் ஆப்பிள் தத்துவம்

நான் நிலம் நீ பழம் ஏன் நீ எனை நோக்கி விழவில்லை நியூட்டனின் ஆப்பிள் தத்துவம்…
0

தன் உணர்வுகளை

ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை…
0

அம்மாவின் கோபம்

அப்பாவின் வார்த்தைகள் பொய்யில்லை ... என்று.. நம்பிவிடுகிற அம்மாவின் கோபம்.. நீண்ட நேரம் .. நிற்பதில்லை..!
0

கரையைத்தேடும் அலைபோல

கரையைத்தேடும் தேடும் அலைபோல , ஒளியைத்தேடும் இருள்போலே தாயைத்தேடும் குழந்தைபோல பசுவைத்தேடும் கன்றுபோல அன்பைத்தேடும் மனிதன்போல…
0

ஓர்உயிர் அப்பா

ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் நடமாடும் ஓர்உயிர் அப்பா!!!!
0

இவனும் ஒரு தந்தை

ஈன்றான் மகிழ்ந்தான் கனவுகள் கண்டான் போதித்தான் பாதுகாத்தான் பிரார்த்தனை செய்தான்-அன்று கற்றதொரு கல்விக்கு பலனற்ற வேலையில்-அவளை…

1 thought on “அப்பா கவிதைகள் | APPA Kavithai in tamil”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்