சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அன்பானவர்களுக்கு உங்கள் அன்பை பகிரும் விதமாக சிறந்த லவ்(love) ஸ்டேட்டஸ் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம் ( love status tamil )
வெண்ணிலா எழுதும் ஒளிப்பெரும் கவிதைகளை ஜன்னல் புத்தகத்தில் தினம் தினம் படிக்கிறேன்!
உன்னைப் போன்று மழையையும் மழையைப் போன்று உன்னையும் நான் கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்!
ஒற்றை இதழ் செங்காந்தல் மலரன்ன ஒளி வனப்பில் மையல் கொண்டு… பற்றி அணைத்து மென் காற்று முத்தமிட எத்தனிக்க.. வெட்கித் தலை கவிழ்ந்து புகைச் சேலை முந்தி எடுத்து.. தனை மறைத்து மருள் சூழ இருளுக்குள் புதைகின்றாள் மெழுகுவர்த்திப் பெண்ணொருத்தி!
எத்தனை தூரத்தினில் நீ இருக்கின்றாய் என்றெனக்குத் தெரியாது; எத்தனை எத்தனை அருகினில் நீ இருந்தாய் என்ற நினைவுகள் போதும் எனக்கு.. இன்றும் இனியும் என்றும் நான் காதலித்துக்கொண்டிருக்க!
வாழ்வதற்கு தேவை படும் பணம் இன்பத்தையும், அன்பையும் கூட்டும். பணத்தின் தேவைக்காக வாழும் வாழ்க்கை ஆடம்பரத்தையும், மனக் கசப்பையும் கூட்டும்!