தமிழ் இலக்கணத்தில் மூன்று விதமான செய்திகள் உண்டு. சிலவற்றை உணரத்தான் முடியும்
1. இலக்கண விதிகள் ( rules )
2. மரபு ( tradition )
3. அலங்கடை ( exception )
1. எந்தக் குற்றியலுகரம் அடுத்தும் ஒற்று வராது, ஒரே அலங்கடை ‘வன்தொடர்க்’ குற்றியலுகரம்.விளக்கு -> இது வெறும் சொல்லாக வரும் பொழுது ஒற்று வரும்.
– விளக்குக் கம்பம்- பச்சைவிளக்குக் காட்டினான்- விளக்குத் தெரிந்தது.ஆனால் விளக்கு + கள் -> விளக்குகள் தான். விளக்குக்கள் கிடையாது. ‘கள்’ என்ற இடைச்சொல் விகுதிக்கு எந்தக் குற்றியலுகரத்திலும் ஒற்று வராது .ஆடுகள் , உறவுகள் , விளக்குகள் , எஃகுகள் , குரங்குகள் , வாய்ப்புகள்
2. மரபாக ‘வன்தொடர்க்’ குற்றியலுகரத்திற்கு ஒற்றுப் போட்டு எழுதியவர்கள் ‘கள்’ விகுதிக்கும் ஒற்றுப் போட்டு எழுதினார்கள் .வாழ்த்துக்கள், எழுத்துக்கள் என்று எழுதினார்கள். வழக்கில் இருப்பதனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாழ்த்துகள் , எழுத்துகள் என்பதே சரி.
3. இவ்வாறு ஓரிரு சொற்கள் மரபாக ஏற்கப்பட்டதைப் பின்பற்றி ‘விளக்குக்கள், கொக்குக்கள்’ ‘ நாக்குக்கள்’ என்று எழுதுவதை மொழி ஏற்காது . There can be lot of exceptions, but exceptions can’t be rules.பந்து என்ற ஒரு தமிழ்ச்சொல் -> பந்துகள் ( As per rules )பந்து என்ற வடமொழிச்சொல் -> பந்துக்கள் ( Exception )அலங்கடையை வரைவாகக் கொண்டு ‘நண்டுக்கள்’ ‘வண்டுக்கள்’ ‘உறவுக்கள்’ ‘வரம்புக்கள்’ ‘குறும்புக்கள்’ ‘ நாக்குக்கள்’ என்று எழுத முடியாது.ஆகவே ‘எழுத்துகள்’ ‘வாழ்த்துகள்’ என்பதே இலக்கணப்படி சரி.