வார்த்தைகள்
சரளமாக விழும்பொழுது
காதல் மட்டும்
சிக்கிக்கொண்டு வர மறுக்கின்றது..
நா வரை மேல் ஏறி
மோதி விழும் அந்தத் தாக்கம்
பார்வைகளின் படபடப்பிலும்
எதையோ பற்றி நிற்கும்
விரல் நுனிகளிலும்
பெரும் இடிகளுக்குப் பின்
ஒளிரும் மின்னல்போல்
வெளிப்பட்டு.. உயிரினை வதைக்கின்றது!
