பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நல்ல அறுவடைக் காலத்திற்காக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது போகி , தை பொங்கல், மாட்டு பொங்கல் , உழவர் திருநாள் என நான்கு தினங்களாக கொண்டாட படுகிறது. குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை, அத்தகைய ஒரு சிறப்பான நாளில் நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறுவது நமது மரபாகம். அந்த வகையில் பலவிதமான பொங்கல் வாழ்த்துகள் ( Pongal Wishes in Tamil ) இதோ உங்களுக்காக.
பொங்கல் வாழ்த்துகள்
பொங்கல் வாழ்த்துகள்
பொங்கல் வாழ்த்துகள் ( Pongal Wishes in Tamil ): தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை உழவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த திருவிழாவாக உள்ளது. தமிழகத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் மதத்துடன் தொடர்புபடுத்தி சொன்னாலும், அதன் உள்ளே இன்றும் உயிர்ப்புடன் தமிழர்களின் இயற்கையான மெய்யியல் வழிபாடு பொதிந்துள்ளதை காணலாம். தமிழகத்தில் சாதி, மத, பொருளாதார பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது இன்றுவரை பொங்கல் பண்டிகைதான். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி பொங்க பொங்கல் விழாவை குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கும். இந்த பொங்கல் திருநாள், ஜாதி, மத பாகுபாடு அற்றது. அதாவது அன்று அறுவடை செய்து நல்ல விளைச்சலை கொண்டாடும் நாள், விளைச்சலுக்காக துணை புரிந்த ஆதவன், மாடு என எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லும் நாள் தான் இந்த பொங்கல் திருநாள்.
பொங்கல் அன்று சூரியனை வேண்டி மக்கள், பொங்கல் சமைப்பார்கள். விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு மக்கள் நன்றி செலுத்துவார்கள். அதன்பின் விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்கு மறுநாள் அன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படும். காணும் பொங்கல் அன்று மஞ்சள் தண்ணீர் தெளித்து மக்கள் கொண்டாடுவார்கள். வரலாற்று ரீதியாக தமிழர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே பொங்கலை கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. தை மக்களை வரவேற்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மகள் வந்தால் போதும் வாழ்வு செழிக்கும், வளம் கொழிக்கும் என்பார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொங்கல் பண்டிகைக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், காதலர் என அனைவருக்கும் வாழ்த்துக்களை நீங்கள் தெரிவிக்க சில வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கிறோம்.