உலகின் உன்னதமான உயிர்களாகிய அன்னையர்களை போற்றும் வண்ணம் சர்வதேச அன்னையர் தினமாக மே 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த உலகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மா போல் யாரும் வர இயலாது. அம்மா கொடுக்கும் பாசத்தை நீங்கள் யார் இடத்திலிருந்தும் பெற இயலாது. இத்தகைய உன்னதமான அன்பின் மகத்துவத்தை அறிந்து அதை போற்றும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில் நாம் நம்மை பெற்ற அன்னையர்களை போற்றி புகழ்ந்து வாழ்த்துவோம். நீங்களும் உங்கள் அன்புள்ள அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களைக் கூற தமிழில் எழுதிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகளை ( Mothers Day Quotes in Tamil ) பதிவிட்டுள்ளோம்.தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
Mothers Day Quotes in Tamil ( அன்னையர் தின வாழ்த்துகள் )
Mothers Day Quotes in Tamil
அன்னையர் தின வாழ்த்துகள் ( Mothers Day Quotes in Tamil ) : இந்த உலகில் உள்ள அத்தனை மனித பிரிவிகளுக்கும் ஒரு உறவு கட்டாயம் இருக்கும் என்றால் அது அம்மா தான். ஒரு பெண்ணால் தான் இந்த உலகில் குழந்தை பெற்றெடுக்க முடியும் என்பதால் இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தாய் என்பவள் இருப்பாள். வஞ்சகம், ஏமாற்று, வெறுப்பு, என பல மோசமாக சக்திகள் நிறைந்த இந்த உலகில் தாய் ஒருவள் தான் தன் குழந்தைக்கு கட்டுப்பாடற்ற அன்பையும், பாசத்தையு் வெளிகாட்டுபவள். நம்முடன் பிறந்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் நம்மை பிரிந்து செல்லக்கூடும். ஆனால் எந்த காலத்திலும் பிரியாது நம்முடன் இருப்பவர் தான் தாய்.
சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். “எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி, நல்வழிக்கு கொண்டு வருவதும் அன்னை தான். இவ்வளவு பெருமை மிகுந்தை அன்னையரை, கடைசி வரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை. இந்த பதிவில் அன்னையர் தினம் வாழ்த்துகள் ( Mothers Day Quotes in Tamil ) படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்ததை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்.