ஒரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசன் ஒருவரிடம் ஞானமுள்ள அமைச்சர் ஒருவர் இருந்தார். ராஜா, எங்கு சென்றாலும் அமைச்சரை அழைத்துச் செல்வார். அவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படியே செய்தார். இதனால் அமைச்சரின் புகழ் நாடு முழுவதும் பரவியது. இதைக் கண்டு அமைச்சர் மீது சிலர் பொறாமை கொண்டனர்.
அமைச்சர் எங்கு சென்றாலும் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் அரசனிடம் சென்று அமைச்சர் நல்லவர் போல் வேடம் போட்டு நம்மை ஏமாற்றுகிறார்கள். அரண்மனையில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் திருடி தன் பெட்டியில் வைத்துள்ளான். அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.
அரசனுக்கும் சில சந்தேகங்கள் எழுந்தன. ஒரு நாள் வேட்டையாடச் செல்லும் போது அமைச்சர் வழக்கம் போல் பெட்டியை எடுத்துச் சென்றார். பெட்டியில் என்ன உள்ளது? என்று அரசன் கேட்டான். உடனே அமைச்சர் பெட்டியைத் திறந்து, ஆடு மேய்ப்பவர் அணிந்திருந்த கந்தல் துணியைக் காட்டினார். இதெல்லாம் என்ன? என்று அரசன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
அரசே! ஆடு மேய்க்கும்போது என் புத்திசாலித்தனத்தைப் பார்த்து என்னை அமைச்சராக்கினீர்கள். இப்படி உயர்ந்த பதவியில் சிலர் பழைய நிலையை மறந்து விடுகிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. பழைய நிலைமையை சுமந்துகொண்டு அமைச்சர் பதவியில் நீடிக்கவே விரும்புவதாக அமைச்சர் கூறினார். அமைச்சருக்கு பல பரிசுகள் வழங்கி கௌரவித்தார். பொறாமை கொண்டவர்கள் தங்கள் தந்திரம் தங்கள் வீழ்ச்சியை ஏற்படுத்தியதாக வருந்தினர்.
கருத்து: மனதில் எப்போதும் நல்ல எண்ணத்தினை மட்டுமே வளர்த்துக்கொள்ளுங்கள்..! நல்லதையே அடைவீர்கள்..!
Lovely story fit for children.
Thanks.