மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கதைகள்

ஒரு ஊரில் அறிஞர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை. பல மன்னர்கள் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவரது ஆலோசனையை நாடினர்.

ஒரு நாள் ஊர் தலைவர் அவரிடம் வந்து, ஏளனமாக, ஐயா! அறிஞர்! நீங்கள் சிறந்த அறிஞர் என்று உலகம் போற்றுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு முட்டாள்! தங்கம் மற்றும் வெள்ளியில் எது அதிக மதிப்பு என்று அவனிடம் கேட்டால், அவன் வெள்ளி என்று கூறுகிறான். அவமானம்! அறிஞர் மிகவும் வருத்தப்பட்டார். பையனை அழைத்து கேட்டார். தங்கம் மற்றும் வெள்ளியில் எது அதிக மதிப்பு வாய்ந்தது? பையன் சொன்னான் தங்கம் என்று. அப்புறம் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று கூறினாய்?

பையன் சொன்னான் தினமும் நான் பள்ளி செல்லும்போது
செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே
என அழைத்துச் சொல்வார் இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல்
செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஒரு வருடமாக நடந்து வருகிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். உடனே அறிஞர் திகைத்தார்!

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கதைகள் உங்களுக்கு கற்பிக்கும் பாடம்:  வாழ்க்கையில் பல சமயங்களில் மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக நாம் முட்டாள்கள் போல் நடிக்கிறோம் ஆனால் நாம் தோல்வியடைவதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் நாம் ஜெயித்திருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்