குங்குமத்தில் கரைத்தவளே
குயில் ராகம் இசைப்பவளே
அங்கங்கள் ஜொலிக்கின்ற
அழகு மயில் பூங்கனவே
கொங்கை மறைத்துவைத்து
கொட்டுகிறாய் தேனருவி
பொங்கு மழை பொழிகின்ற
பூவனமாய் உன் மேனி
மங்கையுனைக் காண்கையிலே
மனம் நிறைந்து போகுமடி
கங்கைநதி வெள்ளம் போல்
காண சுகம் பெருகுதடி
எங்கு நான் சென்றாலும்
என்னவளே உன்நினைப்பு
தங்குதடி நெஞ்சினிலே