சங்கம் வைத்து வம்பு வளர்த்தோம் சங்கடத்தை இங்கே தொலைத்தோம்… சாதி,மத சான்றை எறித்தோம் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தோம்… சுடும் வெயிலினும் சூறியனை போட்டிக்கு அழைத்தோம்… குட்டி சுவற்றில் கூட்டம் சேர்த்து ஊர்க் கதையை உபசரித்தோம்… சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சூசனமாய் கேலி செய்தோம்… கேட்பார் இன்றி நாம் திரிந்தோம் கேள்வி வந்து நாம் பிரிந்தோம்..
