காதில் உள்ள கம்மலுக்கு என் கண்டனத்தை சொல்லடி கன்னத்தை உரசும் திமிரில் ஏளனமாய் பார்க்குதென்னை
நெற்றி பொட்டும் நேர்வகிடும் திருத்திய உன் புருவங்களும் கருத்த காந்த விழிகளும் திருடனாய் மாற்றுத்தென்னை
கைது செய்தது கண்களால் அடைத்தது இதயச்சிறையில் இனி விடுதலை விரும்பாத ஆயுள் கைதி நானல்லவா…
