என் நேர்கொண்ட
பார்வை நடுக்கமுறுதே..
திமிர்ந்த புன்னகை
கொடுத்து நிற்கிறாய்;
என் திரண்ட
தேகம் சிலிர்ப்புறுதே..
அமிழ்ந்து அமிழ்ந்து
எரியும் சுடரெனவே..
என் ஆன்மம்
உன் அசைவுகளில்
அலையாடுதே…
அளந்து அளந்து
வடித்த சிலையழகில்
என் ஆண்மை
முழுவதுமாய் குடைசாயுதே!
