ஒரு தந்தையின் ஏக்கம் ————————— மகனே! என் மகனே! முப்பது வயது வரை உன்னை முதுகில் சுமந்தவன் நான் இப்போது மும்முப்பது கடந்து முதுகொடிந்து நிர்க்கிறேன் என்னை முதுகில் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை முதியோர் இல்லம் சேர்க்காதிரு நாற்ப்பது வந்தால் நாய் குணம் என்பார்கள் இப்போது எனக்குள் இரண்டு நாய் குணங்கள் நீ தடம் மாரும்போது ஊன்றுகோலாய் இருந்த எனக்கு நீ ஊன்றுகோலாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு ஊன்றுகோல் வாங்கித்தந்தால் போதும்
