தன்
மேல் விழும்
அத்தனை
ஒளித் துகள்களையும்
பிரதிபலித்துவிட்டு
தனக்குப் பின்
நிழல் என்னும்
இருளை
வைத்துக்கொள்ளும்
பொருட்கள் அனைத்தும்
சொல்வது என்னவென்றால்..
உன் சோகங்களை எல்லாம்
உனக்குப் பின்
ஒளித்துக்கொண்டு..
ஒரு புன்னகைக்கு
உன் புன்னகையை
பிரதிபலித்து நில் என்று!
