அடி நல்லவளே, என் தோழீ, மேகம் திரளுது பார்! கார் காலம் வந்து விட்டுது!
மல்லரை எல்லாம் அடக்கிய மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் – நம் மாயோனின் உருவம் போல கருமேகங்கள் திரண்டு விட்டன!
அந்த மாயோன் மேகத்தில், முருக வேல் மின்னல்!
கருமேகத் திரளில், கடம்ப மாலை சூடிய முருகனின் வேல் போல், பளிச்சென்று மின்னல் மின்னுதே!
மலையரண்களின் மேல் வேல் எய்த முருகனின் கொன்றைப் பூக்கள் பூக்கத் துவங்கி விட்டன! கார்காலம் வந்து விட்டதே! சொன்னபடி அவரும் வந்து விடுவார்!