மறையும் சூரியனால் ஒளிரும் சந்திரனாய்

நீளக்கனவில் நீளும் நினைவில் நிரந்தரத் துடிப்பில் நீ வேண்டும் எனக்கு உனக்கென நிற்கும் மனதில் ஓடும் இதயத்தில் ஒழுகும் உயிரில் விழிக் கொணரும் கண்ணீரில் விரல் தழுவும் கவிதையில் நீ வேண்டும் எனக்கு கார்மேக மழையின் நீரோடும் வீதியில் மார்பில் சாய்ந்தபடி வெகுதூரம் நடந்துச்செல்ல நீ வேண்டும் எனக்கு சோர்வுற்ற நேரம் சொர்க்கம் தந்த மடியாய் பார்க்கயியலா இருளில் பருவம் பார்த்த ஒளியாய் நீ வேண்டும் எனக்கு மறையும் சூரியனால் ஒளிரும் சந்திரனாய் நீ வேண்டும் எனக்கு உறையும் பணியில் உறங்கும் வெப்பமாய் நீ வேண்டும் எனக்கு காதல் கடிகாரமாய் -என்னால் மயங்கும் குடிகாரனாய் நொடிப் பொழுதும் நீங்காதவனாய் நீ வேண்டும் எனக்கு மெய்யாய், மெய்யின் உயிராய் மெழுகாய், மெழுகின் தீபமாய் தினமுருகி மனவரும்பும் என்னுள மலருக்கு மெல்லொளியாய் நீ வேண்டும் எனக்கு…. நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்