அதீத அன்பையோ….
அளவில்லா நேசத்தையோ
உட்சபட்ட கோபங்களையோ
உள்ளமறியா வேதனைகளையோ
கண்ணீர் ததும்பும் விழிகளையோ
கண் காணாத சோகங்களையோ
சுயத்தை இழக்கா கற்பனையோ
சொல்லத் தெரியா காதலையோ..!!
Suren
உள்ளூர வைத்துக் கொண்டு
உதடுகளில் சிரித்து வாழும்
ஆண்களை புரிந்து கொள்வது
அத்தனை சுலபமில்லை தான்..!
