பதினான்கே வயதுஉலகம் அறியும் முன்னே கழுத்திலே தாலி கயிறு,ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியே நான்கு ஆண்டுகள் கழிந்ததுவேண்டாத தெய்வமில்லைகட்டாத தொட்டில் இல்லை.வரம் வேண்டி காத்திருந்த அம்மாவுக்குவலியும் நானும் ஒன்றாகவே பிறந்தோம்,அதிர்ஷ்டமும் இல்லை தாய்ப்பாலும் இல்லைகொன்றுவிடு இல்லை சென்று விடுஅப்பத்தா வேதம் ஓத அப்பா விரட்டியும் விட்டார்.வயிறு வளர்க்க வழியே இல்லைஒரு மொழம் கயிறு இருந்ததுமாறாப்பை இறுக்க கட்டிமார்போடு தொட்டிலும் கட்டிதினக்கூலி வேலை செய்வார் அம்மாகளைப்பிலே உறங்கிப் போவேன் நான்.ரெண்டு வருடம் கழிந்ததுபிரிந்த குடும்பமும் சேர்ந்தது,வீட்டில் இருந்தே பழகிவிட்டார் அப்பாவேலைக்கு போவதே வழக்கமாக்கிவிட்டார் அம்மாஎடுப்பார் கைப்பிள்ளையாக அப்பாஎப்பவும் செல்லபபிள்ளையாக நான்.பதினாறு ஆண்டுகள் கழிந்தது அம்மாவுக்குபள்ளிப் படிப்பும் முடிந்தது எனக்கு,இந்த மார்க்க வச்சு பன்னி மேய்க்க போ அப்பா அடிக்கஎந்த படிப்பாவது படி என்று அம்மா அணைக்ககல்லூரியில் கனவுகளோடு நான்வயலிலே கண்ணீரோடு அம்மா.கல்லூரி இரண்டாம் ஆண்டுகாலத்துக்கும் மறக்கவே முடியாத ஆண்டுபுதியதாய் வாங்கிய கைப்பேசியில்முதல் அழைப்பே அப்பாக்கு விபத்துஅப்பாவுக்காக அழுததை விடஅம்மாவுக்காக அழுததே அதிகம்முப்பது ஆண்டுகள் ஆனது எனக்குமுப்பத்தி நான்கு ஆண்டுகள் ஆனது அம்மாவுக்குஇன்பம் மறந்தது துன்பம் மறக்கஎனக்காக அம்மாவும் அம்மாவுக்காக நானும் இன்றும் ஓடுக்கொண்டிருக்கிறோம்தாலிக்கயிற்றால் கட்டி அறுந்த அம்மாவின் வாழ்க்கைபாசக்கயிற்றால் இன்றும் சுழல்கிறது.இது உயிரை எடுக்கும் கயிறல்லஉயிரைக் கொடுக்கும் கயிறு
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்