கம்பனின்
கற்பனையிலும்
உதித்திடாத கவிதை அவள்;
பாரதியின் நடையினிலும்
விழுந்திடாத நளினம் கொண்டவள்;
கண்ணதாசன் பாட்டினிலும்
சிக்காமல் நழுவி வந்த நங்கை அவள்;
வாலி அவன் தாடி தடவி
யோசித்த வரிகளிலும்
வைரமுத்துவின் வைர வார்த்தைகளிலும்
வந்து விழாத பெண்மனத்தாள்;
இவன் சிந்தையில் விழுந்துவிட்டாள்
ஐயோ… அந்தப் பேரழகியை
என்னவென்று நான் வர்ணிக்க!
