பார்க்கிறாய்
பார்க்க வைக்கிறாய் தவிக்கிறாய்
தவிக்க வைக்கிறாய் மனதில் என்னடி
மறைத்து வைக்கிறாய் மௌனம் பூசியே
ஒளித்து வைக்கிறாய் நீயாய்
சொல்வாயா நானாய் சொல்வேனோ
யாரும் சொல்லாமல் காதல் வெல்வோமோ சிரிக்கிறாய்
சிரிக்க வைக்கிறாய் சில நொடி கரைய வைக்கிறாய்
நுரைக்கிறாய் நுரைக்க வைக்கிறாய் தரையிலே மிதக்க வைக்கிறாய்
பார்வை ஏட்டில் பதிய வைக்கிறாய்
வேர்வை மழையில் நனைய வைக்கிறாய்
ஓசையின்றி உடைய வைக்கிறாய்
ஒற்றை ஆளாய் உளற வைக்கிறாய் வளைகிறாய்
வளைய வைக்கிறாய் நுழைகிறாய்
நுழைய வைக்கிறாய்
களைகிறாய் களைய வைக்கிறாய்
இழைகிறாய் இழைய வைக்கிறாய்
தளர்கிறாய் கொடியாய் தளர வைக்கிறாய்
தலையணைக் கனவை வளர வைக்கிறாய்
மதுவாய் மெல்ல மயங்க வைக்கிறாய்
மலர்களில் வண்டாய் முயங்க வைக்கிறாய்
மாலை செந்தூரம் வாயில் வந்தேறும்
மடியில் உன் தேகம் மனதில் சந்தோஷம்.
