ஒரு குறிஞ்சிப் பூ
பூப்பது போல்
உன் இதழ் மலர காத்திருக்கிறேன்;
அந்த முல்லைக்கொடி
அசைவுகளில்
எனக்கான நாணம் யாசிக்கின்றேன்;
பெரும் மருதக்குவளை
மலர் விழிகளில்
காதல் ஒளிரக் காண்கின்றேன்;
நெடும் நெய்தல் பிரிவின்
இறுக்கங்களில்
ஓர் உவர்ப்பு நெடி உணர்கின்றேன்;
உன் பார்வைகளற்ற
பாலை வெளியில்
நான் பஞ்சம் பிழைத்துக் கிடக்கின்றேன்!
