தன் எதிர்கால மனைவிக்கு எழுதிய காதல் மடல்என் அன்பு மனைவி !!
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது.
இந்த நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்பதும் தெரியாது.
ஆனால்,என்னிடம் எப்படியும் வருவாய் என்று தெரியும்.
ஏனென்றால்,இறைவன் உன்னை எனக்காகவும் என்னை உனக்காகவும் படைத்திருக்கின்றான்.
நான்தான் உன் அன்பு கணவன்
.என் மனைவி !!
நீ இப்பொழுது எந்தப் ஆணையாவது காதல்செய்து கொண்டு இருக்கலாம்,அல்லது காதல் தோல்வியில் கவலை அடைந்திருக்கலாம்.பல ஆண்கள் உன்னை ஏளனமாக கண்ணீர் விட வைத்திருக்கலாம்
.கவலைப்படாதே என் உயிரே
அது என் பிரார்த்தனையாக கூட இருக்கலாம்.
இறைவன் உனக்காக படைக்கப்பட்டவளன் நானாக இருக்கும் போது நீ எத்தனை ஆண் உண்மையாக விரும்பிய போதும் அவர்கள் உன்னை விரும்பமாட்டார்கள்
.என் உயிர் மனைவியே !
!என்னைத்தவிர எந்தஆணும் உன்னை நேசிக்கமாட்டான்
.நான் உனக்காக பிறந்தவன்
.கவலைப்படாதே!
என்னிடம் நீ வரும் பொழுது உன்னை அன்பால் அரவணைப்பேன்
.உன் கண்ணீரில் கரைந்த காதலை மறக்கச் செய்வேன்.
அன்று நீ புரிந்து கொள்வாய் உன் அன்புக் காதலன் நான் என்பதை.
என் அன்புக் மனைவி !
உன் அழகு வேண்டாம்!!
உன் பணமும் வேண்டாம்
இறைவணுக்கு அஞ்சக் கூடிய நல்ல பெண்னாக இருந்தால்போதும்.
என் உயிர் மனைவி !!
கவலைப்படாதே!
உன் பழைய வாழ்க்கையை மறந்து விடும் அளவு உன்னில் என் அன்பு நிறைவாக இருக்கும்.
உன் எதிர்காலத்தை அழகாக்கும் உன் இன்னொரு உயிர் நான்.
என் மனைவி!
உன் அருகில் இப்பொழுது நான் இல்லை.
ஆனால் என்னை நீ சரணடையும் பொழுது உன்னில் இருந்து நான் என்றும் நீங்க மாட்டேன்.
மரணம் என்ற ஒன்றைத் தவிர.
என் மனைவி !
எங்கிருக்கிறாய்!?
உனக்காகவே என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்.
நீயும் நானும் சந்திக்கும்அந்த அழகிய திருமண நாளை இறைவன் விதியில் எப்பொழுது எழுதிருக்கிறான்?
காத்திருக்கிறேன் !!
கலங்காமல் நீயும் காத்திரு
