எப்போதே மறந்து போன அதட்டிய ஆசிரியர் முகம் ஆருயிர் நட்புக்களின் முகம் இதமான தோழிகளின் முகம் ஈரமில்லா சமூகத்தின் முகம் உறவுகளின் விஷ முகம் ஊராரின் பொய் முகம் என்னவனின் சிரித்த முகம் ஏழையரின் ஏக்க முகம் ஐயமான அதிகாரி முகம் ஒழுக்கமில்லா சில மனித முகம் ஓர வஞ்சனை மாமியார் முகம் எல்லாம் மறந்தாலும் என் இனிய தாயே உன் முகம் எப்படி மறப்பேன்
