பாரதியே நின் கவிதை வரிகளில்உன்னி நான் காணவில்லை நீநினைத்து எழுதிய ஒவ்வொருவரும்ஒவ்வொன்றும் உயிர்க்கொண்டுஎழுந்து கண்ணெதிரே நிர்ப்பதைஅல்லவோ காண்கின்றேன்…..’யாதுமாகி நின்றாய் காளிஎங்கும் நீ நிறைந்தாய்…’என்றாய்….. என்முன் காளிதாயாய் சிரித்து அன்பு பொழிவதைகாண்கின்றேன்………………..’எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்..சித்தியும் அசித்தையும் இணைத்தவனேகண்முன்னால் கொணர்ந்து நிறுத்திவிட்டாய்’பாஞ்சாலியைப் பேசவைத்த உன் கவிதை வரிகளில்பாஞ்சாலி உயிர்க்கொண்டு உரிமைக்குரல்எழுப்புவதைக் கண்டேன்..இப்படியே எழுதிக்கொண்டே போகலாம்செந்தமிழ் புலவர்ச்செம்மல் பாரதியேநீ என்றும் மஹாகவி கவிஞரின் சிரஞ்சீவிஉயிரோட்டம் காணும் உந்தன்தீந்தமிழ் கவிதை வரிகளால்
