புத்தாண்டு வாழ்த்துகள்
நட்புறவுகளுக்கு….
புத்தாண்டே வருக
புதுமை பல தருக
எண்ணிய எண்ணங்கள்
யாவருக்கும் ஈடேற … !!
அன்பு நெஞ்சங்கள்
அழகாய் வாழ
படைப்புகள் பல
படைத்து… !!
பகடைகளை வென்று
உண்மையை நேசி
உறவை பூசி
மெழுகாய் உருகி
பலமாய் வாழ்க….. !!
மனசெல்லாம் இதமாக
பணமெல்லாம் நிறைவாக
குணமுடனே
கூடி வாழ்க..
நட்புறவுகளே… !!