தீப்பிழம்பாய் இருக்கட்டும் எப்போதும் !தவறான பார்வை பார்ப்பவனின் கண்களை உன் கனல் பார்வையால் பொசுக்கிவிடு !அர்த்தமற்ற சமுதாயத்தில் உனக்கு நீதி கிடைப்பது மிக அரிது :நயவஞ்சகர்கள் உன்னை தற்குறியாய் ஆக்கும் முன்…நீ அந்த நயவஞ்சகர்களை கழுவில் ஏற்றிவிடு !உன் கைகள் அதற்கு துணையாகட்டும்…உன் மனம் அதற்கு வலிமை சேர்க்கட்டும் !நீ கடல் அலையாய் இல்லாமல்பொங்கி எழும் சமுத்திரம் எனஇந்த உலகிற்கு காட்டிவிடு !பெண்ணே நீ யாருக்கும் அடிமையும் இல்லை உன்னை அடிமையாக இங்கு யாருக்கும் உரிமையும் இல்லை.
