உன்
மவுனங்களைப் படித்துக்கொண்டே
மொழிகளை மிரட்டுகிறேன்!
ஆம்
அள்ள அள்ளக் குறையாத கவிதைகளை
அள்ளித் தருகின்றன
அதை சொல்லச் சொல்லச் சுமையேறி
மொழிகள் மிரளுகின்றன
இன்னும் இன்னும் உன் மௌனமெனும் வானத்தில்
என் எண்ணமெனும் மேகங்கள் திரளுகின்றன
இனி மொழிவனக்காடுகளில் விடாத கவிமழை!
