அன்பை மறைத்து பொய்யான கோபத்தை காட்டுகிறான் அதை புரிந்துகொள்ள முடியாமல் எதிரியாய் பார்க்கிறோம் பாலூட்டிய தாயின் அன்போ கருவறையில் சுமந்ததினாலோ தந்தை மறைத்து வைத்திருக்கும் அன்போ மனதென்ற அறையிலோ அவன் கண்கள் கலங்க விடலாமா ஒரு எதிரியை போல பார்க்கலாமா அவன் சொன்ன சொல்லின் அர்த்தங்களும் வேதங்கள் கூட சொல்கிறதே நம் சந்தோஷ வாழ்க்கையோ அவன் உழைப்பினால் அதை புரிந்துகொள்ளாமல் அவனை புண்படுத்தினால் ஒடிந்தே போவான் சோகத்தினால் வயிற்றில் சுமந்தவள் உனக்கு உலகம் என்றால் உன்னை மார்பில் சுமப்பவனுக்கு உலகம் நீதானே அன்புக்கு பஞ்சமில்லாதவன் மனதில் என்றும் வஞ்சமில்லை
