தடுமாறிய தருணங்களில் தளராதே மகனே என தட்டிக்கொடுத்து தைரியம் சொன்னவன் தடம் மாறியபோது தட்டிக்கேட்டு அறிவுரை சொன்னவன் நான் வெற்றி பெற்ற போது கைத்தட்டி மகிழ்ந்தவன் தோல்வியுற்ற போது தோள்தட்டி ஆறுதல் சொன்னவன் தன்னம்பிக்கை என்னும் விலையில்லா விதையை என்னுள் விதைத்தவன் என் கனவுகளை நிறைவேற்ற நித்தம் உழைத்து தன் ஆசைகள் அனைத்தையும் தன்னுள் மறைத்து என்றும் எனக்காக வாழும் உயிர் என் தந்தை
