முதல் முறை அல்லவா
முதல் முறை அல்லவா அதனால்தான் எதுவும் நிலையிலில்லை நினைவிலுமில்லை மீண்டு வருவதற்குள் எல்லாம் முடிந்தும் விட்டது, ஆற அமர ஒரு முறை கொடுத்துக்கொள்ளவா? இரண்டாவது முத்தங்களும் அழகுதான்! 0
முதல் முறை அல்லவா அதனால்தான் எதுவும் நிலையிலில்லை நினைவிலுமில்லை மீண்டு வருவதற்குள் எல்லாம் முடிந்தும் விட்டது, ஆற அமர ஒரு முறை கொடுத்துக்கொள்ளவா? இரண்டாவது முத்தங்களும் அழகுதான்! 0
தலைக்குள் எதிரொலிக்கிறது உன் குரல் கண்ணுக்குள் மாயமாய் மிதக்கிறது உன்னுடல் ஜென்மங்களாய் நினைவில் உறைந்து போன என் பெண்ணுருவே! கண்டதும் காதல் எப்படி சாத்தியம் என்கிறாய் நீ! 1
இன்னொருத்தி மீது காதல் கொள்வேன் என்று எப்படி நம்புகிறாய்? உடன் பழகிய உனக்குத் தெரியாதா? நான் எவ்வளவு சோம்பேறி என்பது! 0
உன் மூச்சுப் பட்டு உறைந்த நான்… உன் முத்தம் பெற்று உருக காத்திருக்கிறேன் !!! 1
விழியால் பேசும் மொழி ஒன்றை கற்று தந்த பெண்ணே! நீ நாணம் கொள்கையில் அம்மொழி பயனற்று போகிறது! உன் விழி நிலம் பார்பதால்….. 0
இதழ் விரிந்த பூக்கள் மணம் பரப்பும்…. உன் கரு இதழ் விரிந்த கண்மலர்களோ எனைப் பறிப்பதேனடடி!! 0