sathuragarathi

சதுரகராதி

பொருள்

ஒரு மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் தொகுத்து, அவற்றிற்கான பொருளை அதே மொழியிலோ, வேறொரு மொழியிலோ எடுத்துரைப்பது அகராதி ஆகும். சொல்லின் பொருளோடு அதன் உச்சரிப்பு, தோற்றம், இலக்கியத்தில் வந்துள்ள இடம், அது வழங்கும் நாடு முதலியனவும் அகராதியில் குறிக்கப்படும்.

சதுகராதி பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பெயர் அகராதியில் சொற்பொருளும், பொருள் அகராதியில் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொல்லும், தொகை அகராதியில் இணைந்துவரும் இலக்கியக் கலைச்சொற்களும், தொடை அகராதியில் எதுகையும் வருகின்றன.[2]

திவாகரம், பிங்கலம் முதலிய நிகண்டுகளில் உள்ள பொருளடக்கத்தை வீரமாமுனிவர் சதுரகராதியில் அகர வரிசைப்படுத்தியுள்ளார். சதுரகராதியை உருவாக்குவதற்குத் தாம் நிகண்டுகளைப் பயன்படுத்தியதாக வீரமாமுனிவரே நூலின் முகவுரையில் கூறுகிறார். மேலும், சதுரகராதியைப் படைக்க கடின உழைப்பு தேவைப்பட்டது எனவும் முனிவர் குறிப்பிடுகிறார். பழைய நூல்களைக் கவனமாகப் பார்வையிட்டு, படி எடுப்போரால் வந்த பிழைகளை நீக்கி, வடமொழி சொற்களை அம்மொழி அறிஞர் துணைகொண்டு திருத்தி, சதுரகராதி என்னும் கருவூலத்தை வளம்பெறச் செய்ததாகக் கூறுகிறார்.

சிறப்பு

Thesaurus என்னும் இலத்தீன் சொல்லைப் பயன்படுத்தி, சதுரகராதியைக் கருவூலம் என்று வீரமாமுனிவர் குறிப்பிடுவது கருதத்தக்கது. சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி. ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது கருவூலம். ஆகும். சதுரகராதியில் ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெடில், கீழெதுகை, தொடைப்பதம், அனுபந்த அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

செய்யுள் வடிவில் அமைந்த நிகண்டுகளிலிருந்து தமிழரை விடுவித்து, எதுகை தேடி சொற்பொருள் காணும் சிரமம் தவிர்த்து, அகர வரிசையில் எளிதாக பொருள் காண முனிவர் வழிசெய்தார். சதுரகராதியில் பெயர்ச் சொற்களாக ஏறக்குறைய 12 ஆயிரம் சொற்கள் உண்டு. பிற்காலத்தில் தோன்றிய எண்ணிறந்த தமிழ் அகராதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது சதுரகராதி. 1732இல் முதல்முறை வெளியானதிலிருந்து சதுரகராதி பல முறை பதிக்கப்பட்டுள்ளது.

சதுரகராதிக்கு எழுதிய இலத்தீன் முன்னுரையில் முனிவர் இவ்வாறு கூறுகிறார்: Vulgaris linguae lexicon, ubi quaslibet lectiones Latine, Gallice, ac Lusitane explico (தமிழில்: பொதுத்தமிழ் அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் இலத்தீனிலும், பிரஞ்சிலும், போர்த்துக்கீசியத்திலும் விளக்கம் தருகிறேன்). மேலும் இந்த நூலின் அமைப்பு பற்றி அதன் முகவுடையில் முனிவர் பின்வருமாறு கூறுகிறார்மேலொட்டு உரை,செந்தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்களில் உள்ள பெரும்பாலான எல்லாச் சொற்களையும் தொகுத்து அவற்றினுள் பொதிந்துள்ள இருமை, பன்மைப் பொருள்களை அவற்றின் ஆற்றலோடுகொடுத்துள்ளேன்.ஒரு பொருள் பல சொற்களாக உள்ள பெயர்ச் சொற்களைக் கொடுத்து அந்தச்சொற்கலைக் கையாண்டுள்ள ஆசிரியர்கள் அங்கங்கே கொள்உம் கருத்தை அறிந்து, அவை கொள்ளும் பல்வேறு நிலைகளையும் காட்டி உள்ள்ளேன். தமிழ் மொழியின் எண் அடிப்படையில் வழங்கும் எண் மலைகள், எழு கடல்கள் அறு சுவைகள்,… போன்ர எண் அடைச் சொற்களின் விரிவுகளை மூன்றாம் பிரிவில் தந்துள்ளேன்.இறுதியாக செய்யுட்கள் இயற்றப் பயன்படும் முதலெழுத்து வேறுபட்ட ஒரே அசை கொண்ட ஒலி ஒர்றுமை உள்ள சொர்றொகுதியைத் தொகுத்துள்ளேன்மேலொட்டு உரை

0
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்