அன்று: பெண்: “அம்மா! பள்ளிக்கூடத்துக்கு சம்பளம் கட்ட இன்றுதான் கடைசி நாள். பணம் கொடு”. அம்மா: “எத்தனை ரூபாய் வேண்டும்” ? பெண்: “மூன்றரை ரூபாய் அம்மா.” அம்மா: “அடேயப்பா! இந்தப் பணத்தில் ஒரு மாசத்துக்கு வேண்டிய மளிகை சாமான்களை வாங்கி விடலாம். இங்கே என்ன பணம் கொட்டியா கிடக்கிறது? போதும் நீ படித்தது. ஒழுங்காய் வீட்டு வேலையைப் பார்”. பெண்: “ஏம்மா இப்படி கோவிச்சுக்கறே? முழுச் சம்பளம் கூட இல்லை. உபகாரச் சம்பளம்தானே அம்மா. தயவு செஞ்சு என் படிப்பை நிறுத்தி விடாதே அம்மா.” இன்று: அம்மா: “கண்ணம்மா. அப்பா இன்று ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்ட வருகிறார். அவரோடு காரில் போய்விடு. வேன் வேண்டாம்.” பெண்: “அம்மா. இந்த மாசத்திலிருந்து ஸ்கூல் ஃபீஸ் ஜாஸ்தி செய்திருப்பதாக பிரின்சிபால் சொன்னார்.” அம்மா: “நீ ஏண்டா அதைப் பற்றியெல்லாம் கவலைப் படறே செல்லம். நானும், அப்பாவும் கவனித்துக் கொள்வோம்.” அன்று: பெண்: “அம்மா. தினமும் மோர் சாதம் அலுத்துப் போய்விட்டது. இட்லி, தோசை என்று ஏதாவது கட்டிக் கொடும்மா.” அம்மா: “இந்த மட்டில் இதாவது கிடைக்கிறதே என்று சந்தோஷப்படு”. -53- இன்று: அம்மா: “டார்லிங்! ஷார்ட் பிரேக்கில் கிருஷ்ணா ஸ்வீட்ஸும், ஃப்ரூட்ஸும் வைத்திருக்கிறேன். லாங் பிரேக்கிற்கு கேக்கும், ஸ்னாக்ஸும் இருக்கு. சரியா?” அன்று: பெண்: “அம்மா. எங்கள் ஸ்கூலில் மேட்டூர் டேம் பார்க்க அழைத்துப் போகிறார்கள். நூறு ரூபாய் கொடும்மா.” அம்மா: நான்தான் முதலிலேயே உன்னை படிப்பை நிறுத்து என்று சொல்லிவிட்டேனே . கேட்காமல் ஏன் என் பிராணனை வாங்குகிறாய்”? இன்று: பெண்: “சம்மர் ஹாலிடேஸ்க்கு எங்க ஸ்கூலில் சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டு போகிறார்களாம் மம்மி. அம்மா: “டோன்ட் ஒர்ரி. டாடியிடம் செக் நாளைக்கு வாங்கிக்கோ” அன்று: பெண்: “அம்மா. பக்கத்து வீட்டு லீலா மாதிரி எனக்கும் கவுன் போட்டுக் கொள்ள ஆசையாக இருக்கிறது.” அம்மா: “கூத்தாடி மாதிரி என்னடி அலங்காரம்? அடக்க ஒடுக்கமா இரு”. இன்று: “எதிர்வீட்டு உஷா மாதிரி எனக்கும் பாவாடை, தாவணி போட்டுக் கொள்ள ஆசையாக இருக்கும்மா.” அம்மா: “வாட் நான்சென்ஸ். அழகாய் ஃப்ராக், ஜீன்ஸ், மிடி என்று போடுவதை விட்டு வேண்டாத ஆசை எல்லாம் படாதே.” -54-
அன்று: அம்மா: “ஏய் மாலு. சீக்கிரமாய் வந்து உட்காரு. உனக்கு பழையதைப் பிசைந்து கையில் போட்டு விட்டு நான் குளிக்கப் போகிறேன்.” இன்று: அம்மா “லதா டார்லிங். சீக்கிரமாய் வந்து சாப்பிடு. அம்மாவிற்கு ஆபீசுக்கு நேரமாகி விட்டது.” பெண்: “அம்மா. இன்னிக்கு மட்டுமாவது சாதம் பிசைந்து கையில் போடும்மா. ஆசையாக இருக்கிறது.” அம்மா: “நீ வரவர ரொம்பவே சைல்ட் ஆகிவிட்டாய். அடம்பிடிக்காமல் வந்து பிரெட்டை சாப்பிடு.” அன்றும், இன்றும் என்றும் பெண்கள்: இந்த அம்மா சுத்த மோசம். நான் எது கேட்டாலும் செய்வது கிடையாது. எனக்கு கொஞ்சம் கூட சுதந்திரமே இல்லை .எல்லாமே அம்மா இஷ்டம் தான்.
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்