நோய் நொடியை தடுத்து ஆயுள் காலத்தை அதிகரிக்கும் ஆவாரம் பூ தேநீர்

ஆவாரம் செடி நாம் சாலையோரங்களில் எளிதாக காண கூடிய அரியவகை மருத்துவ குணங்களையுடைய மகத்தான செடி ஆகும். இச்செடியானது எவ்வளவு வறட்சியிலும் காய்ந்து போகாத அற்புத சக்தி உடைய ஆவாரை, பல்லாண்டு வாழக்கூடிய ஒரு புதர்த் தாவரம். இப்பயிரில் இருந்து கிடைக்கும் இலைகள்,பூக்கள், விதைகள் என அனைத்தும் மருத்துவ குணமுடையது.இதில் கிடைக்கும் ஆவாரம் பூ இதழ்களை கொண்டு ஆவாரம் பூ தேநீர் தயாரிக்கலாம்.“ஆவாரம் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” – என்பது சித்த மருத்துவப் பழமொழி. இப்படிப்பட்ட ஆவாரம் பூ ஓரு சர்வ நோய் நிவரணி ஆகும் .நீரழிவு உள்ளவர்கள் தினமும் ஆவாரம் பூ தேநீர் குடித்து வந்தால் நீரழிவு நோய் கட்டுக்குள் அடங்கும். சர்ம நோய்களுக்கு மருந்தாகும். சர்மத்தை மேம்படுத்தும் .உடல் சூட்டை குறைக்கும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி கிருமிகளை அழிக்கும். சீரான இரத்த ஒட்டத்தை ஊக்குவிக்கும்.உடல் வலுவடையும். மேக நோய்கள், நீர்கடுப்பு, சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள், உள்ளங்கால் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு மருத்தாகும். இந்த ஆவாரம் பூ பொடியை கொண்டு ஆவாரம் பூ தேநீர் தயாரிக்கலாம்.இதனை தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் 200மிலி தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதித்தவுடன் ஒரு தேக்கரண்டி ஆவாரம்பூ பொடி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கியவுடன் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். டீ ,காபி போன்றவற்றிற்கு பதிலாக இயற்கை வழியில் கிடைக்கும் ஆவாரம் பூ பொடி கொண்டு தேநீர் பருகலாம் என கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி இளநிலை ஆராய்ச்சியாளர் மாணவன் சேர்மராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் ஆவாரை சாகுபடி தொடர்பான தகவல்களுக்கு 9344532096 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு பயன் பெறலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்