அண்ணாதுரை

பிறப்பு

அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார் ) மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்; அண்ணாவின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். அண்ணா தம் அன்னை பங்காரு அம்மாவை சிறு வயதிலே இறந்துவிட்டதால். அவரது தந்தை நடராசன் – ராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டதால் அண்ணா அவரது சிற்றன்னை ராசாமணி அம்மாளிடம் வளர்ந்துவந்தார். அவரை அண்ணா “தொத்தா” என்று அன்புடன் அழைப்பார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.

தத்துவம்

அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர்

ஒன்றே குலம், ஒருவனே தேவன்

என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார்.

கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்

என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் “…..நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்……” என்றார்.

அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்ல

இதழியல்பணி

அண்ணாதுரைக்கு ஈ.வெ.ரா.பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டவுடன் குடியரசு இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தார். 1942ஆம் ஆண்டில் திராவிடநாடு தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார். பெரியாரோடு பிணக்கு ஏற்பட்ட பொழுது தமது தரப்பு வாதங்களைக்கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலைமணி இதழில் ஆசிரியராக இருந்தார். 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென நம்நாடு என்னும் நாளிதழைத் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக இருந்தார். 1963ஆம் ஆண்டில் காஞ்சி என்னும் வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். Home Land என்ற ஆங்கில வார இதழை 2-6-1957ஆம் நாள் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.

4
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்