ஈரோடு தமிழன்பன்

பிறப்பு

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6- ஈரோடு தமிழன்பன்; தொகுப்பாசிரியர்: வ.ஜெயதேவன்; பக்.872; ரூ.750; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; )044- 2526 7543.
 புகழ்பெற்ற தமிழ்க்கவிஞரான ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்து இருக்கின்றன. இது ஆறாவது தொகுதி. இத்தொகுதியில் கவிஞரின் 14 கவிதைத் தொகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
 கவிதையின் பேசு பொருள்களும், அவற்றின் வெளிப்பாடுகளும் ஒவ்வொரு கவிதையிலும் மாறுபட்டும், புதியனவாகவும் இருக்கின்றன. இப்போதுதான் புதிதாக எழுதத் தொடங்கும் இளைஞனைப் போல கவிஞர், ஒவ்வொரு கவிதையையும் புதுவிதமாக எழுதிப் பார்க்கிறாரோ என்று இதிலுள்ள கவிதைகள் நம்மை எண்ண வைக்கின்றன.
 தான் பிறந்த சென்னிமலை பற்றி பாடிய “அன்னை மடியே உன்னை மறவேன்’ தொகுப்பு, இஸ்லாம் இயற்கை நெறி பற்றி எழுதிய “இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம்’ தொகுப்பு, கவிஞரின் அமெரிக்கப் பயண அனுபவங்களின் பகிர்வாக “ஓலைச்சுவடியும் குறுந்தகடும்’ தொகுப்பு, வாழ்க்கையின் பொருளை உணர்த்தும் “சொல்ல வந்தது’ தொகுப்பு, ஈழப் போராட்டத்தைப் பற்றிய கவிதைகள் அடங்கிய “என் அருமை ஈழமே’ தொகுப்பு, மானுட வெற்றிகளை, வீழ்ச்சிகளைப் பதிவு செய்யும் “கதை முடியவில்லை’ தொகுப்பு உள்ளிட்ட 14 தொகுப்புகளும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
 கவிதைகள் எழுதுவதில் மட்டுமல்ல, தமிழில் புதுவிதமான கவிதைகளை உருவாக்கி வளர்த்தெடுப்பதிலும் கவிஞருக்குள்ள ஆர்வம் வியக்க வைக்கிறது. கஜல் என்னும் உருதுக் கவிதை வடிவத்தைத் தமிழுக்குக் கொண்டு வரும்விதமாக அவர் எழுதிய கவிதைகளையும், தமிழ்ப் பழமொழியையும் ஜப்பானிய சென்ரியுவையும் கலந்து பழமொன்ரியு என்ற புதிய வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஓயாமல் கவிதை வெளியில் பயணிக்கிற கவிஞரின் கவிதை முயற்சிகள் அவர் ஒரு பிறவிக்கவிஞர் என்ற உண்மையை நமக்குள் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்கின்றன.

நூல்கள்
 • சிலிர்ப்புகள்
 • தோணி வருகிறது(முதல் கவிதை)
 • விடியல் விழுதுகள்
 • தீவுகள்கரையேறுகின்றன
 • நிலா வரும் நேரம்
 • சூரியப் பிறை
 • ஊமை வெயில்
 • திரும்பி வந்த தேர்வலம்
 • நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
 • காலத்திற்கு ஒருநாள் முந்தி
 • ஒருவண்டிசென்ரியு
 • வணக்கம் வள்ளுவ
 • தமிழன்பன் கவிதைகள்(தமிழக அரசு பரிசு)
 • பொதுவுடைமைப் பூபாளம்
 • மின்மினிக் காடுகள்
 • சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
புனைபெயர்
 • விடிவெள்ளி
2
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்