பிறப்பு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று தம் தாய்மொழியாம் தமிழ்மொழி போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்டார்.
நூல்கள்
பாரதியார் எழுதிய நூல்களில் சில
- பாரதியார் பகவத் கீதை
- ஞானரதம்
- ஆறில் ஒரு பங்கு
- விடுதலைப் பாடல்கள்
- புதிய ஆத்திச்சூடி
- பதஞ்சலியோக சூத்திரம்
- விநாயகர் நான்மணிமாலை
சிறப்புப் பெயர்கள்
- முண்டாசுக் கவிஞன்
- பாரதியார்
- மகாகவி
- சக்தி தாசன்