பிறப்பு:
கிபி 12 ஆம் நூற்றாண்டில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர். கம்பனின் பெயர் அவர் காளி கோயிலின் அருகில் இருந்ததால் கம்பர் என்று பெயர் வந்தது என்று சிலரும், வேறு சிலர் கம்பங்கொல்லையை காத்து வந்தததால் கம்பன் என்று பெயர் வந்தது என்று சிலரும் கூறுகின்றனர். மற்றும் சிலர் அவரின் பெயர் வந்ததுக்கு காரணம் கம்பர் குலம் அதாவது காலி கோயிலில் பூஜை செய்பவர்கள் குடும்பம் கம்பர் குளம் என்று அழைக்கப்படுகிறது. அதனாலேயே அவருக்கு அந்த பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர் . இருந்தாலும் அவரது பெயர் எப்படி தழுவி வந்தது என்று இன்று வரை சரியாக தெரியவில்லை மரபு சார்ந்து இந்த பெயர் வந்தது என்று தமிழ் ஏடுகளில் இடம்பெற்றுள்ளது.
கம்பரின் அடைமொழி:
- கவி பேரரசர்
- கம்பர் கவிச்சக்கரவர்த்தி
- கல்வியில் பெரியவர் கம்பர்
நூல்கள்
கம்பர் தனது படைப்புகளின் மூலம் தனது திறமைகளையும், தமிழின் அழகையும், எளிமையினையும் தனது படைப்புகளின் மூலம் உலகிற்கு தந்தார். அவரின் படைப்புகளின் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
- சிலையெழுபது
- மும்மணிக்கோவை
- ஏரெழுபது
- கம்பராமாயணம்
- சரசுவதி அந்தாதி
- திருக்கைவழக்கம்
- கம்பர் தனிப்பாடல்கள்