இரவு நேர கதைகள்

வெட்டுக்கிளியும் எறும்பும் || Nighttime Stories

ஒரு அடர்ந்த காட்டில் வெட்டுக்கிளியும் எறும்புகளும் வசித்து வந்தன. இந்த எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டே இருக்கும். தங்கள் எதிர்காலத்திற்காக அவை  ஒன்றாக உணவு திரட்டி சேமித்து கொண்டு இருந்தார்கள். 

அப்போது ஒருநாள் வெட்டுக்கிளி எறும்பு களிடம் கேட்டது, “நீங்கள் ஏன் எப்போதும் இப்படி கடினமாக உழைத்து உணவு சேகரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?”. அதற்கு அந்த எறும்புகளில் ஒன்று கூறியது, “இப்போது கஷ்டபட்டு உணவு சேகரித்தால் தான் குளிர்காலம் வரும் போது  பட்டினிகிடக்காமல் உணவை சாப்பிட முடியும்” என்றது.

அதற்கு அந்த வெட்டுக்கிளி சிரித்துக்கொண்டே சொன்னது, “என்னைப் பாருங்கள் நான் எவ்வளவு சந்தோஷமாக ஆடி பாடி கொண்டு திரிகிறேன், எதிர்காலத்தை நினைத்து எப்போதும் வருத்தப்படக்கூடாது நிகழ்காலத்தை சந்தோஷமாக வாழவேண்டும்” என்று சொன்னது.

நான் இன்றைக்கு உணவு சாப்பிட்டு விட்டேன் இனி நான் சந்தோஷமாக ஆடி பாடி திரிய போகிறேன் என்று சிரித்துக் கொண்டே சென்றது. சிறிது நாட்கள் கடந்து சென்றன குளிர்காலமும் வந்தது.

அப்போது அந்த எறும்புகள் அனைத்தும் தாங்கள் வெயில் காலத்தில் சேர்த்து வைத்த உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு  இருந்தன. ஆனால் இந்த வெட்டுக்கிளிக்கு உணவே கிடைக்கவில்லை.  இந்த வெட்டிக்கிளி உணவு தேடி அங்கேயும் இங்கேயும் பசியால் அலைந்தது.

ஆனால் எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக வெட்டுக்கிளி அந்த எறும்புகள் கூட்டத்தை தேடி வந்தது. அந்த எறும்புகளிடம் கேட்டது, “எனக்கு மிகவும் பசியாக உள்ளது எனக்கு சாப்பிட உணவும் தங்க இடமும் வேண்டும்” என்று கேட்டது. 

அப்போது அந்த எறும்பு சொன்னது, “நீதான் வருங்காலத்தை நினைத்து எப்போதும் வருத்தப்பட மாட்டாய் என்று கூறினாயே, இப்போது தெரிகிறதா வெயில் காலத்தில் நீ சாப்பிட உணவும் தங்க இடமும் சேகரித்து வைத்திருந்தால் இப்படி கஷ்டப்பட வேண்டுமா” என்று கேட்டது.

அப்போதுதான் வெட்டிக்கிளி தான் செய்த தவறை புரிந்து கொண்டது பின்பு அந்த எறும்பும் அந்த வெட்டிகிளிக்கு சாப்பிட உணவும் தங்க இடமும் அளித்தது. வெட்டுக்கிளியும் இனி வரப்போகும் நாட்களில் உணவு சேகரித்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது.

கண்ணோட்டம் : வரும்முன் காப்பதே சிறப்பு

இவ்வாறாக நீங்களும் உங்களது குழந்தைகளிடம் இரவு நேர கதைகள் கூறுவதன் மூலம் அவர்களுக்கும் எதிர்காலம் பற்றிய சிந்தனை தோன்றும்.

Nighttime Stories
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்