தெனாலி ராமன் கதை

தன் வேடிக்கை விளையாட்டுகளினால் அரசனின் கோபங்களிலிருந்து விடுபட்டு அவ்வரசனையே தன் வசப்படுத்தும் புத்திசாதுரியம் கொண்ட தெனாலிராமனின் கதைகள் படிப்பவர்களுக்கு ஒரு நகைச்சுவை விருந்தாகும். மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் இவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால், அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. இவருடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார். தெனாலி ராமன் கதை நகைச்சுவை வாய்ந்ததாகவும் தெனாலியின் சாதுர்ய திறமையை வியக்கும் வகையில் உள்ளது. இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. வாங்க நண்பர்களே இப்போது தெனாலிராமன் திருடர்களை முட்டாளாக்கிய கதைகளை பற்றி படித்து மகிழ்வோம்.

முட்டாள் திருடர்கள்

ஒரு நாள் இரவு திருடர்கள் தெனாலி ராமன் வீட்டிற்குச் சென்று சில புதர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர். தெனாலி ராமன் தன் தோட்டத்தில் உலா வந்து கொண்டிருந்த போது புதர்களுக்குள் சலசலக்கும் சத்தம் கேட்டது. அவருடைய தோட்டத்தில் திருடர்கள் இருப்பதை அறிந்தார். தெனாலி ராமன் உள்ளே சென்று அவர் மனைவியிடம் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் விலைமதிப்பற்ற பொருட்களை ஒரு பெட்டியினுள் வைத்து கிணற்றில் போட்டு படி சத்தமாக திருடர்கள் காதில் விழும் படி சொன்னான்.

புதருக்குள் மறைந்திருந்த திருடர்கள் இந்த உரையாடலைக் கேட்டனர். சிறிது நேரம் கழித்து, தெனாலி ராமன் காலி பெட்டியை எடுத்துக்கொண்டு தனது வீட்டு முற்றத்திற்கு கொண்டு சென்றார். கிணற்றில் வீசினான்.

தெனாலிராமன் வீட்டிற்கு சென்றவுடன் திருடர்கள் கிணற்றுக்கு சென்று தண்ணீர் எடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் இரவு முழுவதும் கிணற்றில் இருந்து தண்ணீரைக் இறைச்சி கொட்டினர், காலையில் கிணற்றில் இருந்த பெட்டியை கண்டுபிடித்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் பெட்டியை திறக்கிறார்கள், அதில் ஒன்றும் இல்லாததை கண்டனர். தெனாலி ராமன் வெளியே வந்து, தனக்கு நல்ல தூக்கத்தைக் கொடுத்ததற்காகவும், தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியதற்காகவும் திருடர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தெனாலிராமன் தங்களிடம் விளையாடியதை அறிந்த திருடர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

கற்பிக்கும் பாடம்: தவறான கூற்றுகளுக்கு நாம் ஒருபோதும் செவிசாய்க்கக்கூடாது என்பதை இந்த சிறுகதை நமக்கு நினைவூட்டுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்