குடும்ப சிறுகதைகள் – வாழ்க்கை ஒரு வட்டம்

ஒரு கிராமத்தில் ஒரு குயவன் தன் தாய், மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு மாமியாரை பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். அவள் ஒவ்வொரு நாளும் குயவனைத் தொந்தரவு செய்தாள். பக்கத்து வீட்டில் அம்மாவைக் குடியமர்த்தச் சொன்னாள். குயவன் அவள் சொல்வதை காதில் வாங்காததுபோல் இருந்தான். அவரது மனைவி அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தால். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். ஒரு நாள் குயவனால் நச்சரிப்பு தாங்க முடியவில்லை.தனது வீட்டில் இருந்து இருபது அடி தூரத்தில் உள்ள வீட்டில் அம்மாவை குடியமர்த்தினார்.

மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள். பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான். அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

சிறுவன் முதலில் தனது அம்மாவுக்கு ஒரு அற்புதமான தட்டு செய்தார். அதை அவன் அம்மாவிடம் கொடுத்தபோது, மகனின் திறமையை எண்ணி பெருமிதம் கொண்டாள். முதலில் அவன் தனக்குச் செய்ததை எண்ணி அவள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். அவள் தன் குட்டி மகனைக் கேட்டாள்: “மகனே! நீ செய்த தட்டு மிக அருமையாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?”

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: “அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்”.

நீதி: வாழ்க்கை ஒரு வட்டம். இன்று நீ பிறக்கு செய்வதை, நாளை பிறர் உனக்கு செய்வர்.

3

1 thought on “குடும்ப சிறுகதைகள் – வாழ்க்கை ஒரு வட்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்