மாணவர் நன்னெறிக் கதைகள்

ஒரு அரசன் நாட்டை ஆண்டு வந்தான். அந்நாட்டு மந்திரி எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் ஒரு மாம்பழத்தை கத்தியால் வெட்டினான். தவறுதலாக கத்தி அவரது சுண்டு விரலை வெட்டியது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான்.

வழக்கம் போல் மந்திரி, எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய்.
காவலர்களே மந்திரியை சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டான். காவலர்களும் மந்திரியை சிறையில் அடைத்தனர். அப்பொழுதும் மந்திரி, எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன.

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் தெய்வங்களுக்கு பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும் அதனால் இவனை விட்டுவிடும்படி உத்தரவிட்டான்.

அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக மந்திரியை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் மந்திரியிடம் சொன்ன அரசன், சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான்.

அரசே என்னைச் நீங்கள் ‘சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கும் என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாததால் என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் மந்திரி.

மாணவர் நன்னெறிக் கதைகள் உங்களுக்கு கற்பிக்கும் பாடம்: எது நடந்தாலும் நன்மைக்கே என நினைத்துக்கொள்ள வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்