தமிழர்கள் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களாவர். “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்ற பெருமை குடி தமிழ் குடியாகும். ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்தியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் இந்த தமிழ் புத்தாண்டை விமர்சையாக கொண்டாடி வருவது வழக்கமாகும். ஆரம்ப காலங்களில் இருந்தே வானியல்⸴ ஜோதிடம் போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் தமிழ் ஆண்டு கால ரீதியாக சிறப்பாகக் காணப்படுகின்றது. இந்த பதிவில் “ தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ” கவிதைகளை காணலாம்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ( TAMIL NEW YEAR )
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ( Tamil New Year ): உலகளவில் தமக்கே உரித்தான கலாச்சாரங்களையும் பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டவர்கள் தமிழர்கள். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் புத்தாண்டும் ஒன்றாகும். வாழ்வின் அனைத்து காலங்களிலும் மன மகிழ்வையும் ஆழ்ந்த அறிவியலையும் உடையதாய் அமைவது தமிழர்களின் பண்டிகைகள் ஆகும்.அந்த வகையில் புத்தாண்டு பிறப்பதனால் வாழ்வில் புதுமைகளும் மகிழ்ச்சியும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாக உள்ளது. காலநிலை மாறுதல்கள் மற்றும் பருவகால மாறுதல்கள் என பல அர்த்தப்பாடுகளை உடையதாக புத்தாண்டு பிறப்பு அமைகின்றது.
மங்கா புகழுடைய தமிழும் அதன் விழுமியங்களும் என்றும் உலகுக்கு முன்னோடியாக இருக்க நாமும் அவற்றின் பெருமையை உலகறிய செய்ய பண்டிகைகளையும் அவற்றின் ஆழமான கருத்துகக்ளையும் உணர்வோம் தலைமுறை தாண்டியும் வாழ வைப்போம். அந்த வகையில் அழகான புத்தாண்டு வாழ்த்து படங்கள் நண்பர்களுக்கு பகிர. இந்த பதிவு தங்களுக்குக் மிகவும் பயனுள்ளதாக அமையும். உங்கள் நண்பர்கள், பெற்றோர் உறவினர்கள், உடன் பிறந்தோர், சகோதரன், சகோதரி, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், காதலன், காதலி, கணவன், மனைவி என அனைத்துத் சொந்தங்களுக்கும் அன்புடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை படங்கள் மூலம் தெரியப்படுத்தத் இங்கு புத்தாண்டு வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கவிதை கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்குக் மிகவும் பயனுள்ளதாக அமையும்.