சிந்தனை தூண்டும் சிறு கதைகள்

வியாபாரி ஒருவர். எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் சரியாக திட்டமிட்டு செயல்படாததால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. கவலையில் ஆழ்ந்திருந்த அவர், வீட்டுக்குப் போக விரும்பாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த, தொலைதூர ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கே ஆற்றின் மணலில் மெல்லிய நிலவொளியில் அமர்ந்து தன் நினைவுகளை ஓட விட்டான். தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட துயரம் அவனை வாட்டியது. கூட்டாளிகள் தன்னைக் நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணி வேதனையில் மூழ்கினார்.

மறுபுறம், எப்படி வியாபாரம் செய்யப் போகிறோம்… குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் என எதிர்காலக் கவலைகள் எழுந்தன. இந்தச் சிந்தனையினாலேயே அவனுடைய வலது கை அவனை அறியாமல் ஆற்றின் மணலை துழாவி அவன் கையில் தட்டுப்பட்ட சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.

விடியல் தொடங்கியது! வெளிச்சம் பரவியது. ஆற்றில் எறிய கற்கள் தீர்ந்தன. கடைசியாக கையிலிருந்த கல்லைப் பார்த்து வியந்தான். காரணம் – அது சாதாரண கூழாங்கல் அல்ல. வைரம்

கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்துச் சென்ற விலைமதிப்பற்ற வைரங்களைத் தவறவிட்டு ஓடியுள்ளனர். அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.

சிந்தனை தூண்டும் சிறு கதைகள் உங்களுக்கு கற்பிக்கும் பாடம்: ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் நம்மை சிறப்பாக வரவேற்கும்.

3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்