நீதி கதைகள் – பேராசை பெரும் நஷ்டம்

ஒரு ஊரில் ராமசாமி என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சுயநலமானவர் அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். அந்த செல்வந்தர் தனது குருவிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். சில நாட்கள் கழித்து குரு ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியினுடையதாக இருக்கலாம் என நினைத்து அந்த பையை அவரிடம் கொடுத்தார். தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை நீங்கள் தான் எடுத்திருக்க வாய்ப்புள்ளது எனவே அவற்றை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார். குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.

இந்த குழப்பத்திற்கு முடிவுகட்ட இருவரும் ஊர் தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய் என கேட்டார். அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என பொய் கூறினான். ஊர் தலைவர் குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடிதாய் என்றார் அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார்.

ராமசாமி தொலைத்திருப்பதோ 40 ஆனால் கண்டறிந்திருப்பதோ வெறும் 30 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. இனி யாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன், இப்போது நீ கிளம்பலாம் என்றார்.

தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி ராமசாமி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்.

நீதி: ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்